Aval Vikatan

அவள் விகடன்

 • இந்த உலகத்துக்கு வந்த காரணம்! - அகிலா
  on January 19, 2019 at 7:00 am

  சமூகத்துக்கும் சக மனிதனுக் கும் ஏதாவதொரு வகையில் பங்களிப்பதன் வழியாகவே நாம் வாழ்கிற வாழ்வுக்குப் பொருள் இருக்கும் என்று சொல்லும் அகிலா, கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டுக் குரியவை. […]

 • ஸ்ரீபோஸ்ட்
  on January 19, 2019 at 7:00 am

  `யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’ என்பதைபோல் ‘பொதுஅறிவு புதிர்ப்போட்டி’யின் பரிசு, இதழில் வெற்றி பட்டியல் வருவதற்கு முன்பே என் இல்லம்தேடி வந்துவிட்டது. நன்றி. […]

 • குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி
  on January 19, 2019 at 7:00 am

  தினம்தோறும் சமையலில் முடிந்த வரை காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்க்க முயற்சி செய்கிறோம். குழந்தைகளோ `இன்னிக்கு கீரையா... நான் சாப்பிட மாட்டேன்; பாகற்காய் கசக்கும்; முள்ளங்கி பிடிக்காது; பறங்கிக்காய் இனிக்கும்: முட்டைகோஸ் ரொம்ப ஸ்மெல்லியா இருக்கும்' எனச் சாப்பிடாமல் இருப்பதற்கு ஏராளமான காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களுக்குப் பிடித்த பூரியிலேயே காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களைக் கலந்துகொடுத்துப் பாருங்களேன்! […]

 • உயிருக்கும் மேலாக பணியை நேசிக்கும் பெண்கள்!
  on January 19, 2019 at 7:00 am

  தினமும் தலைப்புச் செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர்களே தலைப்புச் செய்தியாகும் நிகழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேறும். பெண்ணுரிமை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் குறித்தும் தினம் தினம் எழுதிக்கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள் 2018-ம் ஆண்டில் திடீரென தாங்களே அத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதைப் பகிரங்கமாகத் தலைப்புச் செய்தியாக்கினார்கள். […]

 • பொதுஅறிவுப் புதிர் போட்டி!
  on January 19, 2019 at 7:00 am

  அவள் வாசகிகளே, இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `RmKV’ பற்றி அழகான ஸ்லோகன் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான ஸ்லோகனும் எழுதி அனுப்பும் வாசகிகளில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் RmKV வழங்கும் ` 2,000 மதிப்புள்ள புடவை அனுப்பி வைக்கப்படும். பரிசாக அளிக்கப்படும் புடவைகளை மாற்றம் செய்ய இயலாது. […]

 • ஏழுக்கு ஏழு - சிரிப்பு...சிறப்பு!
  on January 19, 2019 at 7:00 am

  லாவண்யா ஸ்ரீராம், செய்தி வாசிப்பாளர் சில வாரங்களுக்கு முன்புதான் நயன்தாரா மேம்கூட போட்டோ எடுத்துக்கிட்டேன். சினிமாவில் அவங்க பல கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்காங்க. அவரை சினிமாவை விட்டே ஒதுக்கிடணும்னு நினைச்சவங்க நிறைய பேர் உண்டு. அதையெல்லாம் மீறி வளர்ந்து, இன்னிக்கு கெத்தா நிற்கிறாங்க. அதுக்காகவே அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘சிவகார்த்திகேயன் 13’ படத்துல நானும் ஒரு சின்ன கதாபாத்திரம் பண்ணிட்டு இருக்கேன். அப்போ, நயன்தாரா மேம்கிட்ட பேசி, பழகுற வாய்ப்பு கிடைச்சது. அப்போதான் இந்தப் போட்டோ வாய்ப்பும் கிடைச்சது! […]

 • மார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி!
  on January 19, 2019 at 7:00 am

  மார்கழி மாதத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, வாசல்தோறும் பூத்துக்கிடக்கும் வண்ணக்கோலங்கள். அந்தக் கோலங்களுக்கான கலர் பொடி தயாரிக்கும் மக்களின் வாழ்க்கைக் கோலத்தைப் பார்வையிடுவதற்காக, கலர் கோலப்பொடி தயாரிக்கப்படும் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்துக்குச் சென்றோம். கேமராவைப் பார்த்ததும், ‘யாரு, என்ன எழுதி எங்க பொழப்பு விடியப்போகுது? எதுவும் வேணாம்...’ என்று அந்த ஊர்ப் பெண்கள் விரக்தியுடன் பேசினார்கள். நாம் காத்திருக்க, சிறிதுநேரம் கழித்து மௌனம் உடைத்தார்கள். […]

 • முதல் பெண்கள்! - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி
  on January 19, 2019 at 7:00 am

  `ருக்மிணி சுயம்வரம்’... ருக்மிணி - லட்சுமிபதி ஜோடியின் காதல் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு, தெலுங்கு மொழியில் புனையப்பட்ட நவீன நாடகம். இதை எழுதிய நாராயண கவி என்பவர், அதை நரசாப்பூர் என்ற ஊரில் மேடை நாடகமாக அரங்கேற்றினார். அப்போதே தென்னிந்தியாவில் பெரிதும் பேசப்பட்டவர் ருக்மிணி! […]

 • 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
  on January 19, 2019 at 7:00 am

  புனே நகரைச் சேர்ந்த 19 வயதான வேதங்கி குல்கர்னி, சைக்கிளில் அதிவேகமாக உலகைச் சுற்றிய ஆசியப் பெண் என்கிற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தன் சைக்கிளில் 29,000 கிலோமீட்டர் தொலைவை 159 நாள்களில் கடந்திருக்கிறார். இங்கிலாந்தின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேலாண்மை பயின்றுவரும் வேதங்கி, இரண்டாண்டுகளாகவே இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். […]

 • அவளும் நானும்! - லதா பாண்டியராஜன்
  on January 19, 2019 at 7:00 am

  வாசகிகளுக்கு: உலக, நாட்டு நடப்புகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். பொது அறிவு விஷயங்களில் கவனம் செலுத்தினால், நமக்கு வரும் பிரச்னைகளை எளிதில் எதிர்கொண்டு வெற்றியடையலாம்! […]

Leave a Reply