கொஞ்சநாள் கழித்து..! – பாவலர் முழுநிலவன் | நாளும் பல நற்செய்திகள் 20-07-2023 | செந்தமிழன் சீமான்
Contact Us To Add Your Business
கொஞ்ச நாள் கழித்து..
முதல்வர் ஐயா முதலீட்டை ஈர்த்துக்கொண்டு, எனது நாலு ஏக்கர் நஞ்சை நிலத்துக்கு வந்தார்.
நானூறு பேருக்கு வேலை கிடைக்கும், நாலு மடங்கு விலை கிடைக்கும் என்றார். நம்பி கொடுத்தேன் நஞ்சையை..
கொஞ்ச நாள் கழித்து..
காடு, மேடு, கண்மாய், குளம், குட்டை, ஏரி என எல்லாவற்றையும் எழுதி வாங்கிக்கொண்டார்கள். அது என்னவோ நில ஒருங்கிணைப்புச் சட்டமாம்..!
கொஞ்ச நாள் கழித்து..
குறைந்த கூலிக்கு கொத்தடிமையாய் வடக்கன் கிடைக்க.. வேலையிலிருந்து உள்ளூர்காரர்கள் விரட்டப்பட்டார்கள்.
கொஞ்ச நாள் கழித்து..
ஊரெங்கும் உள்ள நஞ்சை, புஞ்சை, தரிசு என எல்லாவற்றுக்கும் ‘சிப்காட்’ எனப் பெயர் வைத்தார்கள்..
இப்போது அங்கே ஆறு இருந்த இடத்தில் ஐபோன் தொழிற்சாலை..
மாடு மேய்ந்த இடத்தில் மெக்டொனால்டு உணவகம்..
மாரியம்மன் கோயில் மேலே மகிழுந்து ஆலை..
கொஞ்ச நாள் கழித்து..
ஐபோன் எல்லாம் குறைவான விலைக்குத்தான் கிடைத்தது..
அரை கிலோ அரிசிக்குத்தான் அரை பவுன் மோதிரத்தைக் கேட்டார்கள்..
பருப்பு வாங்க பண்ட பாத்திரத்தை அடகு வைத்தோம்..!
கொஞ்ச நாள் கழித்து..
ஊரையும், ஊரணியையும் உறிஞ்சி குடித்தபின்,
வளங்களை வழித்து நக்கியபின்..
ஒவ்வொரு நிறுவனமாய் ஓடத் தொடங்கினார்கள்..
இன்னொரு ஏழை நாட்டுக்கு அல்ல.. இன்னொரு ஏமாளி நாட்டுக்கு..!
கொஞ்ச நாள் கழித்து..
ஐம்பூதமும் மாசடைந்த ஊரில்..
நீ ஆளுங்கட்சியின் பிள்ளையாய் இருந்தாலென்ன?
எதிர்க்கட்சியின் பிள்ளையாய் இருந்தாலென்ன?
நோயும், நொடியும் இருவருக்கும்தான்..!
– பாவலர் முழுநிலவன்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இதை கற்பனை செய்தால் மரணபயம் . மாற்றம் தந்து உண்மையான ஏற்றம் காண வாக்களிப்பீர், நாம் தமிழர் கட்சிக்கே.நாம் தமிழர்,நாமே தமிழர்.
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
??அருமையான பதிவு ??
சிறப்பு ☝️???♥️♥️
பலம்.எழுச்சி மனம்.சிந்தனை.புரட்சி. இப்படி எதுவுமே இல்லாத நேற்றைய தமிழ் இனத்தில் பிறந்ததே எனக்கு அவமாணம்தான்..☝??????
????????
Fact fact fact ?
பிரபாகரன் அவர்கள் கரையாளர் சமுதாயத்தில் பிறந்தார் என்ற உண்மை தகவலை உலகுக்கு அறிவித்த தொல் திருமாவளவன் அவர்களுக்கு நன்றி
பிரபாகரன் பிள்ளைமார் சமுதாயத்தில் பிறந்தவன் கிடையாது கரையாளர் சமுதாயத்தில் பிறந்தவன் என்ற உண்மையை கூறிய திருமாவளவனுக்கு நன்றி